குழந்தைகளுக்கான தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை ஆரம்பம்

Prabha Praneetha
3 years ago
குழந்தைகளுக்கான  தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை ஆரம்பம்

பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத் Sri Lankan Identification Number/SLIN தை உள்ளீடு செய்யும் நடைமுறை, நேற்று  முதல் ஆரம்பிக்கப்படுவதாக, ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 2021 டிசம்பர் 14 திகதி அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை பிறக்கும்போது, பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு செய்யப்படவுள்ளது.

மேற்படி இரு திணைக்களங்களுக்கும் இடையில் இணையம் மூலம் தகவல்கள் பரிமாற்றம் இடம்பெறும். இந்த புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும், பரீட்சார்த்த திட்டம் கம்பஹா, தெஹிவளை, ஹங்குராங்கெத்த, குருணாகல், இரத்தினபுரி மற்றும் தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4