டெப்லோ பகுதியில் மண்சரிவில் சிக்குண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்

#SriLanka #Death
Prasu
2 years ago
டெப்லோ பகுதியில் மண்சரிவில் சிக்குண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெப்லோ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பலியானதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழைபெய்து வருகின்ற நிலையில், நேற்று (01) மாலை ஏற்பட்ட மண்சரிவிலே இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய சஞ்ஜீவ விலமவீர என்பவர் இவ்வாறு மண்சரிவில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.

அதிக மழைகாரணமாக குறித்த பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் அப்பகுதியிலிருந்து நேற்று பிற்பகல் வெளியேற்றப்பட்டனர்.

இந் நிலையில் வீட்டில் இருந்த மீன் தாங்கியை எடுக்கச்சென்றவரே இவ்வாறு மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போயுள்ளார்.

பின்னர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரும் பிரதேச வாசிகளும் மண்சரிவில் சிக்குண்டு கிடந்த சடலத்தை நேற்று இரவு மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!