சீன கப்பல் விவகாரம் குறித்த தனது கரிசனையை ரணிலிடம் வெளியிட்டது இந்தியா!

Mayoorikka
3 years ago
சீன கப்பல் விவகாரம் குறித்த தனது கரிசனையை ரணிலிடம் வெளியிட்டது இந்தியா!

இலங்கைக்கு சீன கப்பல் விஜயம் மேற்கொள்வது குறித்த தனது கரிசனையை இந்தியா இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா தனது தெளிவான கரிசனையை வெளியிட்ட போதிலும் சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் இலங்கை வரும் என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ள நிலையிலேயே இந்தியா தனது கரிசனையை ஜனாதிபதியிடம் வெளியிட்டுள்ளது என  இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி அலுவலகமோ கொழும்பில் உள்ள இந்திய தூதரகமோ உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடாத போதிலும் இந்த விடயம் குறித்த தனது கரிசனையை இந்தியா மிகஉயர்மட்டத்தில் வெளியிட்டது என இந்த விவகாரங்கள் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!