எம்மை அடக்க முடியாது - ரெட்டா

Kanimoli
3 years ago
எம்மை அடக்க முடியாது - ரெட்டா

விசாரணை என்ற பெயரில் எங்களை அழைத்து அச்சுறுத்துவதன் மூலமோ அல்லது எங்களை கைது செய்து சித்திரவதை செய்துவிட்டு விடுவிப்பதன் மூலமோ அல்லது எங்களைக் கைது செய்து சிறையில் தொடர்ந்து அடைத்து வைப்பதன் மூலமோ அரசாங்கத்திற்கு எதிரான எங்களின் குரலை அடக்கவே முடியாது என காலிமுகத்திடல் போராட்டக் குழுவைச் சேர்ந்த சமூக ஊடகச் செயற்பாட்டாளர் ‘ரெட்டா’ என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விசாரணைக்காக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்றுக் காலை அழைக்கப்பட்டிருந்த ‘ரெட்டா’ நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார். 

விசாரணைக்குச் செல்வதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


நேற்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சென்றிருந்த இவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னரே இவர் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே கடந்த மே மாதத்தில் கொழும்பு - கோட்டை நீதிமன்றத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!