வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் - வெளிவரும் கொடூரம்

Kanimoli
3 years ago
வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் - வெளிவரும் கொடூரம்

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் கட்டுத் துவக்கால் சுடப்பட்டும், வாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளிகள் இவரது கையை வெட்டி எடுத்து சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (31) மாலை அந்தப் பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழுெவான்று அவைரத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்டுத்துவக்கினால் அவர் சுடப்பட்டுள்ளதாகவும், அதன் பின் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

படுகொலை இளம் குடும்பஸ்தரது உடலில் பலத்த வெட்டு காயங்கள் காணப்படுவதுடன், ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்டு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று காணப்படுவதாக சிதம்பரபுரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இச் சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சா என அழைக்கப்பட்ட ஜோன்சன் என்ற 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரே கொல்லப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!