ராஜிதவின் வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

Prathees
3 years ago
ராஜிதவின் வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

முன்னாள் அமைச்சர் சமகி ஜனபலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வை. ராஜித ஹரிச்சந்திர சேனாரத்னவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவை நீக்கி கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய நேற்று (01) உத்தரவிட்டுள்ளார்.

திம்பிரிகசாய பிரதேசத்தில் 10.11.2019 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் திரு.கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கை பரிசீலித்த நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்தது.

ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தற்போது சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!