ஜனாதிபதி செயலக பொருள்களுக்கு சேதம் விளைவித்த ஐவர் நுவரெலியாவில் கைது

Prathees
3 years ago
ஜனாதிபதி செயலக பொருள்களுக்கு சேதம் விளைவித்த ஐவர் நுவரெலியாவில் கைது

ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து பொருள்களுக்கு சேதம் விளைவித்த சம்வத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நுவரெலியா பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை  கைதுசெய்வதற்கு நுவரெலியா நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய குறித்த சந்தேகநபரை கைதுசெய்வதற்கு அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸார், அங்கு மேலும் 4 பேர் மறைந்திருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, அவர்களும் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஐந்து சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பிங்கிரிய, கொதட்டுவ, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4