மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட 19 வயது இளைஞன்!
#SriLanka
#Death
Prasu
3 years ago

உடபுஸ்ஸல்லாவை, ரபானவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுபான விருந்து ஒன்றின் போது இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் என்பதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் உடபுஸ்ஸல்லாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்



