தங்க விலையானது எதிர்வரும் ஆறு மாதங்களில் குறையும்...
Prabha Praneetha
2 years ago

தங்க விலையானது எதிர்வரும் ஆறு மாதங்களில் குறையும் என உலகத்தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது தங்க நுகர்வோர் நாடாக இருக்கும் இந்தியாவில் தங்கத்திற்கான விலை குறைந்தால் தங்க விலையில் பெரும் மாற்றம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சந்தைக்கு வந்த பழைய தங்க நகைகள் மறுசுழற்சிக்கு வந்தமையினால் விலை கட்டுப்படுத்தப்படும் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் தங்க விலை கணிசமான அளவில் குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, கடந்த நாட்களில் 22 கரட் தங்கத்தின் விலை 166,000 ரூபாவாகவும்,24 கரட் தங்கத்தின் விலையும் 180,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



