கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறேன்- ஜோ பைடன் தகவல்
#America
#President
#Biden
#Covid 19
Prasu
3 years ago

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்த நிலையில் ஜோ பைடன் காணொலி மூலம் கணினி மைக்ரோசிப் தயாரிப்பு கூட்டத்தில் பங்கேற்றார்.
அதன்பிறகு அவர் கூறும்போது, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் என்றார்.



