நாட்டை விட்டு வெளியேறும் ஜுலி சாங் - ஜனாதிபதியுடன் சந்திப்பு!
#SriLanka
#AnuraKumaraDissanayake
#julie chung
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி கொழும்பில் இருந்து வெளியேறும் அவர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.
இதன்போது, ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி பாராட்டினார்.
அத்துடன், ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றியைத் தெரிவித்தார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்