இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்!

Nila
3 years ago
இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்!

கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், நேற்று 5 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்ததாககவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் 60வயதுக்கும் மேற்பட்டவர்கள் என திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் அடங்குகின்றனர்.

இதனிடையே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தில் மாத்திரம் 119 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் திணைக்களம் கூறியுள்ளது.

இந்த நோயாளிகளுடன் இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 94 பேர் என பதிவாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4