பாராளுமன்ற சபைத் தலைவராக சுசில் நியமிக்கப்படலாம்?

Prathees
3 years ago
பாராளுமன்ற சபைத் தலைவராக சுசில் நியமிக்கப்படலாம்?

பாராளுமன்றத்தின் புதிய தலைவராக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புதிய நியமனத்துடன் பாராளுமன்ற சபைத் தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவிகள் வெற்றிடமாகியுள்ளன.

அதன்படி, அந்தப் பதவிகளுக்கு மீண்டும் நியமனம் செய்ய வேண்டும்.

புதிய பிரதமராக பதவியேற்ற திரு.தினேஷ் குணவர்தன இதற்கு முன்னர் சபைத் தலைவராக கடமையாற்றினார்.

 ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இருந்தார்.

இதேவேளை, நாளை பாராளுமன்றம் கூடவுள்ளது.

நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, ஆளும் கட்சியின் அவைத்தலைவர் மற்றும் பிரதம அமைப்பாளர் பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்வது அவசியமாகும்.

இதேவேளை, ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

நிதியமைச்சின் புதிய கட்டிடத்தின் கேட்போர் கூடத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4