இலங்கைக்கு எதிராக ராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தடைகள் ஏற்படும் ஆபத்து -சஜித் எச்சரிக்கை!

Nila
2 years ago
இலங்கைக்கு எதிராக ராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தடைகள் ஏற்படும் ஆபத்து  -சஜித் எச்சரிக்கை!

காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை ராஜதந்திரத் தடைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை தேசிய சீர்திருத்த செயலகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசியல் பங்காளிகள் மத்தியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

உலகின் முக்கிய நகரங்களில் இலங்கை மீது தூதரகத் தடைகளை விதிக்கவும் வேறு வகையான பொருளாதாரத் தடைகளை அமுல்படுத்தவும் விவாதங்கள் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பொருளாதாரத் தடைகள் ஏற்பட்டால் பாதிக்கப்படப் போவது இந்த தேசத்தின் சாதாரண குடிமக்களாகவே இருப்பர்.

எனவே இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் குழுக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும்  உயர்மட்ட அதிகாரிகள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் பிரேமதாச குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!