துப்பாக்கியுடன் இறுதிச் சடங்கிற்குச் சென்ற 6 சந்தேகநபர்கள் கைது

Prathees
3 years ago
துப்பாக்கியுடன் இறுதிச் சடங்கிற்குச் சென்ற 6 சந்தேகநபர்கள் கைது

மொரவலப்பிட்டி பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பயணித்த குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்தில் துப்பாக்கி மற்றும் 07 தோட்டாக்களுடன் 06 சந்தேக நபர்களை அலவ்வ பொலிஸார் (24ஆம் திகதி) கைது செய்துள்ளனர். 

அஹெலியகொட, பின்தெனிய, தியஹொடல்ல, பிலவலகன மற்றும் மடுவா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 33-55 வயதுடைய குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெட்டிபொல பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக கொட்டியாகும்புர பகுதியைச் சேர்ந்த நபர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து, அலவ்வ மொரவப்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் எடுப்பதற்காக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பேருந்தில் துப்பாக்கி இருந்ததை அப்பகுதி மக்கள் அவதானித்து அலவ்வ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.அதன்படி அலவ்வ பொலிஸார் பேருந்தை சோதனையிட்ட போது அங்கிருந்த ஒருவரிடம் இருந்து அரை தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 07 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. .

துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4