மாயமான 15 வயது மகள் உயர் மின்கம்பத்தில் ஏறி தந்தை ஆர்ப்பாட்டம்!

Kanimoli
3 years ago
மாயமான 15 வயது மகள் உயர் மின்கம்பத்தில் ஏறி தந்தை ஆர்ப்பாட்டம்!

  தனது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு பொலிஸாரிடம் வலியுறுத்தி நபர் ஒருவர், குடாவெல, கலேவெல பிரதேசத்தில் உயர் மின்கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, தனது 15 வயது மகள் இளைஞர் ஒருவருடன் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கிரிபத்கொட கஹல சந்தி பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் போராட்டம் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4