100 நாட்களின் பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பும் ஜனாதிபதி செயலகம்
Mayoorikka
2 years ago

ஸதம்பிதமடைந்திருந்த ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று(25) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், குறித்த செயலகத்தின் பணிகள் சுமார் 100 நாட்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, குறித்த பகுதியில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



