அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்-வாஷிங்டனில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி
#America
#GunShoot
#Death
Prasu
3 years ago

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் புறநகர் பகுதியான ரெண்டனில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒருவர் இறந்து கிடந்தார்.
5 பேர் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சிலர் இடையே ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.



