பிடிகலவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் பற்றி பொலிஸார் விளக்கம்

Prathees
3 years ago
பிடிகலவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் பற்றி பொலிஸார் விளக்கம்

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தடியால் தாக்கிய நபர் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சந்தேக நபர் தலகஸ்பே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர்.

நேற்று (23) பிடிகல, தலகஸ்பே மஹேன பகுதிக்கு முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்வதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சந்தேக நபர் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் விசாரணை நடத்த பிடிகல பொலிஸ் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

அதன்போது சந்தேகநபரை கைது செய்ய சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக 9 வயது சிறுமியை பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கு பலப்பிட்டிய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மற்றுமொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்தமை தொடர்பில் எல்பிட்டிய நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4