இறக்குமதி செய்யும் எரிவாயுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – லிட்ரோ
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
அடுத்த வாரத்தில் மேலும் ஆறு எரிவாயு கப்பல்கள் நாட்டை அடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இம்மாதத்தில் எரிவாயு இருப்பு 33,000 மெட்ரிக் தொன்னாக இருப்பதோடு பொதுமக்களுக்கு தொடர்ந்து எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது .
இதேவேளை எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை சுமார் 80,000 ஆக இருந்த போதிலும், தற்போது அதனை 100,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது .



