பொத்துவிலில் எரிபொருளுக்காக காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

Prasu
3 years ago
பொத்துவிலில் எரிபொருளுக்காக காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை பொத்துவிலில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று  (23) காலை இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் லகுகலையைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய 51 வயதுடைய திசாநாயக்கா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவர் பொத்துவில் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னாள் பெற்றோலை பெறுவதற்காக சம்பவதினமான இன்று காலையில் இருந்து காத்திருந்த நிலையில், திடீரென மயக்கமுற்று கீழே வீழ்ந்து மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

மேலும், இவர் இருதய சத்திர சிகிச்சை மேற்கொண்டவர் எனவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4