அர்ஜெண்டீனா வனப்பகுதியில் 70 ஆண்டுகளுக்குப் பின் பிறந்துள்ள 2 ஜாகுவார்
Prasu
3 years ago

அர்ஜெண்டீனா வனப்பகுதியில் அழிவின் விளிம்பில் உள்ள ஜாகுவார்களை மீட்டெடுக்கும் முயற்சியில் விலங்கு நல அமைப்புகள் அவற்றைப் பிடித்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தி வருகின்றன. அந்த குட்டிகள் வளர்ந்ததும் வனப் பகுதியில் மீண்டும் விட்டுவிட்டு வருகின்றனர்.
அவ்வாறு கடந்த ஆண்டில் விடப்பட்ட ஜாகுவார் ஒன்று 2 குட்டிகளை ஈன்றுள்ளது. ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பின் இந்த ஜாகுவார்கள் வனப்பகுதியில் பிறந்துள்ளதால் விலங்கு நல ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அர்ஜென்டினா வனப்பகுதியில் வெறும் 250 ஜாகுவார்கள் மட்டுமே உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.



