நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் தாய்லாந்து பிரதமர் வெற்றி

#PrimeMinister
Prasu
3 years ago
நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் தாய்லாந்து பிரதமர் வெற்றி

தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் பிரதமரான பிரயுத் சான்-ஓ-சா ஆட்சியில் பொருளாதாரம் சரியாக கையாளப்படவில்லை என்றும் ஊழலை தடுக்கவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் கடந்த நான்கு தினங்களாக விவாதம் நடக்கிறது. இதனையடுத்து அவரின் ஆட்சியை எதிர்த்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் கொண்டு வந்தார்கள்.

அதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் பிரதமருக்கு ஆதரவாக 256 வாக்குகள் கிடைத்துள்ளது. அவருக்கு எதிராக 206 பேர் வாக்களித்த நிலையில், ஒன்பது பேர் வாக்களிக்கவில்லை. நம்பிக்கையற்ற தீர்மானத்தில் பிரதமர் வெற்றியடைந்ததால் அவரோடு அமைச்சரவையில் இருக்கும் மந்திரிகள் 10 பேரும் தப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!