காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது

Nila
3 years ago
 காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது

  நேற்றையதினம் இடம்பெற்ற அசம்பாவித்ததை அடுத்து இன்று தினம் காலிமுகத்திடல், ‘கோட்டா கோ கம’ வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் இரவோடிரவாக நடத்தப்படும் தாக்குதல்களுக்குத் தாம் அஞ்சப்போவதில்லை என்றும், இந்தப் போராட்டத்தில் இடைவெளியோ அல்லது தடங்கலோ ஏற்பட்டாலும் தமது இலக்கை அடையும்வரை போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் சிலர் தெரிவித்தனர்.

இதேவேளை, இன்றும் ஜனாதிபதி செயலகத்தைச்சூழ பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக அப்பகுதிக்குள் நுழைய முடியாதவாறு மறியல்கள் இடப்பட்டு பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4