நம்பர் பிளேட்டை மாற்றி எரிபொருள் வாங்க வந்த நபர் கைது...

Prathees
3 years ago
நம்பர் பிளேட்டை மாற்றி எரிபொருள் வாங்க வந்த நபர் கைது...

நோர்வூட் நகரில் உள்ள மஸ்கெலியா  கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் போலி இலக்கத் தகடு காட்டி பெற்றோல் பெற சென்ற ஒருவரை  நோர்வூட் பொலிஸார் இன்று (23) கைது செய்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு  3300 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தின் கடைசி இலக்கமான 0 முதல் 3 வரையிலான வாகனங்களுக்கு எரிபொருளை வெளியிடுவதை மட்டுப்படுத்துவதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த  27 வயதான சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில், தான் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளுக்கு தொடர்பில்லாத எரிபொருள் விடுவிப்பு இலக்கம் என்ற பதிவு இலக்கத் தகட்டை பொருத்தியுள்ளார்.

எரிபொருளை பெற்றுக் கொள்ள வந்த போது, ​​எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் குறிப்பிடப்பட்ட இலக்கத்திற்கு அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் சந்தேக நபரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் உரிமம் மற்றும் காப்புறுதி சான்றிதழை பெற்றுக் கொண்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி இலக்கத் தகடுகளை வைத்து வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தைப் பயன்படுத்தி வேறு குற்றங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!