விபத்துக்குள்ளான எரிபொருள் பௌசர் : டீசலை எடுக்க திரண்ட மக்கள்

Prathees
3 years ago
விபத்துக்குள்ளான எரிபொருள் பௌசர் :  டீசலை எடுக்க திரண்ட மக்கள்

மீரிகஹா ஹலுகம பிரதேசத்தில் எரிபொருள் போக்குவரத்து பௌசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மீரிகமவில் இருந்து வரகாபொல நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற வாகனமே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 விபத்தையடுத்து எரிபொருளை எடுப்பதற்காக பெருமளவிலான பிரதேசவாசிகள் வருகை தந்ததாகவும் பொலிஸாரும் இராணுவத்தினரும் வந்து அவர்களை வெளியேற்றியதாகவும்  அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டீசல் போக்குவரத்து பௌசரே இவ்விபத்தில் சிக்கியுள்ளது.

குறுகிய வீதியில் பயணித்த போது, ​​மற்றுமொரு வாகனத்தை அனுமதிப்பதற்காக பின்னோக்கிச் செல்லும் போது, ​​வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4