எனது வாழ்க்கையே இந்த பாராளுமன்றம் தான்- புதிய ஜனாதிபதி ரணில்

Prabha Praneetha
3 years ago
எனது வாழ்க்கையே இந்த பாராளுமன்றம் தான்- புதிய ஜனாதிபதி ரணில்

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய ரணில் விக்ரமசிங்க,

சபாநாயகர் அவர்களே, நானும் நீங்களும் 1973 ஆம் ஆண்டு எமது அரசியல் பயணத்தை ஒன்றாக ஆரம்பித்தோம், எனக்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள்.

நீங்கள் பிரதான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி. நான் 45 வருடங்கள் இந்த பாராளுமன்றத்தோடு பயணித்துள்ளோன்.

எனது வாழ்க்கை இந்த பாராளுமன்றம் தான் இருக்கின்றது. அதனால் இந்த பாராளுமன்றம் ஊடாக எனக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைத்துள்ளமை மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4