நான் ஜனாதிபதியானவுடன் ரணில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்: டலஸ்

Prathees
3 years ago
நான் ஜனாதிபதியானவுடன் ரணில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்:  டலஸ்

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நிச்சயமாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படமாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராடும் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை நிராகரிக்கும் வகையில் அப்படிப்பட்ட ஒருவரை பிரதமராக நியமிக்க தான் ஒருபோதும் தயாராக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அமைக்கப்படவுள்ள சர்வகட்சி  அரசாங்கத்தின் பிரதமர் பதவி எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் திரு.அழகப்பெரும கருத்து வெளியிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4