பல்கலைக்கழக மாணவி ஒரு மூடை நெல்லு கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கிய சம்பவம் பதிவு

Kanimoli
3 years ago
 பல்கலைக்கழக மாணவி ஒரு மூடை நெல்லு கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கிய சம்பவம் பதிவு

   யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழக கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஒரு மூடை நெல்லு கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கிய சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பிறந்ததினத்தை சிறப்பித்த குறித்த மாணவியை மாணவியின் நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் எவ்வாறு கிடைத்தது என கேட்டுள்ளார்கள்.

அப்போதே மாணவி மிகவும் சர்வசாதாரணமாக நெல்லுக்கு கொடுத்து பெற்றோல் வாங்கிய கதையைக் கூறியுள்ளார். அத்துடன் யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் ஒருவரிடமிருந்தே குறித்த பெற்றோலை தான் பெற்றதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது தனது நண்பிக்கும் பேர்த்டே பரிசாக 2 லீற்றர் பெற்றோலும் கொடுத்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் பண்டமாற்று முறை என்பது இதுதானா என குறித்த மாணவியின் நண்பர்கள் தங்களது பேஸ்புக் பதிவுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனராம்.    

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4