யாழ் செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் திருட்டு

Kanimoli
3 years ago
யாழ் செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் திருட்டு

யாழ் செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை இருவர் திருடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த வீட்டினுள் அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்த இருவர், வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

காலையில் வீட்டார் எழுந்து மோட்டார் சைக்கிளை இயக்கிய போது மோட்டார் சைக்கிளில் இயங்காத நிலையிலையே பெற்றோல் களவாடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கமராவில் பரிசோதித்த போது, வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பெற்றோலை திருடிக்கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தனது வீட்டினுள் புகுந்து பெற்றோல் திருட்டில் ஈடுபடும் வீடியோ காட்சியினை சமூக வலைத்தளங்களில் வீட்டின் உரிமையாளர் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4