இலங்கை எரிபொருள் நெருக்கடி - கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை
Prasu
3 years ago

இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன போட்டி பயிற்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
“ஆசியா கோப்பை வரப்போகிறது, இந்த ஆண்டு எல்பிஎல் போட்டிகள் இடம்பெறவுள்ளது. எரிபொருள் இன்றி இரண்டு நாட்களாக நான் எங்கும் செல்லவில்லை, ஏனென்றால் நான் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசையில் இரண்டு நாட்கள் காத்திருந்தேன்.
அதிர்ஷ்டவசமாக, எனக்கு இன்று கிடைத்தது, ஆனால் பத்தாயிரம் ரூபாய், இது அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான் பயன்படுத்தலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.



