ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்கள் வௌியேறினர்!

Mayoorikka
3 years ago
ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்கள் வௌியேறினர்!

ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து வௌியேறியுள்ளனர்.

ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.

ஜூலை 9 ஆம் திகதி முதல் இன்று காலை வரை மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை திறக்கப்பட்டிருந்தது.

ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள், தாம் கைப்பற்றியுள்ள அரச கட்டடங்களை மீள கையளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4