வெளிமாவட்டங்களுக்கான Gas விநியோகம் ஆரம்பம்
Mayoorikka
2 years ago

இன்று(13) தொடக்கம் வெளிமாவட்டங்களுக்கான சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 55,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவத்தின் தலைவர் முதித தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 3,700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அவற்றை கப்பலிலிருந்து இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.



