ஜனாதிபதி மாளிகையில் இருந்த தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் சேதம் - தொல்பொருள் திணைக்களம்

Reha
3 years ago
ஜனாதிபதி மாளிகையில் இருந்த தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் சேதம் - தொல்பொருள் திணைக்களம்

ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த இடங்களில் உள்ள புராதன மற்றும் கலாசாரப் பொருட்கள் மேலும் அழிந்து போவதையோ அல்லது காணமல் போவதையோ தடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

அந்த இடங்களில் உள்ள பெறுமதிமிக்க பொருட்களை பாதுகாக்க கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4