பஸ்ஸில் சனநெரிசலால் இருவர் உடல் நசுங்கி மரணம் - ஆத்திரத்தில் பேருந்தை எரித்த மக்கள்

#Death
Prasu
3 years ago
பஸ்ஸில் சனநெரிசலால் இருவர் உடல் நசுங்கி மரணம் - ஆத்திரத்தில் பேருந்தை எரித்த மக்கள்

கம்பளை பெரட்டாசியில் இருந்து புஸ்ஸலாவை நோக்கி பயணித்த பஸ் நேற்று காலை விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே இருவர் மரணமடைந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்து, வகுப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

19 வயதுடைய காச்சாமலை பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கவிஷான் என்பவரும், 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான புஸ்பகுமார என்பவரும் உயிரிழந்துள்ளனர்.

எரிபொருள் பற்றாக்குறையால், புறைந்தளவான பேருந்துகளே வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் ஏற்றப்பட்டுள்ளனர்.

இதனால் பேருந்து பாரம் தாங்காமல் மலைப்பகுதியோடு சாய்ந்துள்ளது. இதன்போது பேருந்தின் ஃபுட்போர்டில் பயணித்த இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள்  பஸ்ஸை எரித்துள்ளனர். 

விபத்தினாலோ அல்லது தீவிபத்தினாலோ ஏனைய பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என புபுரெஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் பயணிகள் போக்குவரத்தில் இரண்டு பஸ்களே சேவையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புரட்டொப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4