வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிபொருள்

Prabha Praneetha
3 years ago
வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிபொருள்

யாழ்.மாவட்ட  வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு  மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள் யாழ்.மாவட்ட செயலகத்திடம்  வெதுப்பக  உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில்  எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளதாகவும், தாம் எரிபொருளை பெற்றுக்கொள்ள ஏதுவாக  நடவடிக்கைகளை எடுக்குமாறு முன்வைத்த கோரிக்கைக்கு தீர்வாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர்  கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

வெதுப்பக உற்பத்தியாளர்கள் தங்களது வெதுப்பக சங்கம் ஊடாக  தொடர்பு கொண்டு உற்பத்தி விற்பனையை தடையின்றி மேற்கொள்ள மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4