ஒரு இலட்சத்து இருபதாயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம்!

Prabha Praneetha
3 years ago
ஒரு இலட்சத்து இருபதாயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம்!

ஒரு இலட்சத்து இருபதாயிரம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்று  சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக மே மாதத்திற்கான மின்சார கட்டணத்தை சமர்ப்பிக்குமாறு அந்த நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பியதன் பின்னர், அது அவசியமில்லை என அந்த நிறுவனத்தின் விளம்பர முகாமையாளர் பியல் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை இரவு மேலுமொரு எரிவாயு கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4