ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் – பிரசன்ன ரணதுங்க

Prabha Praneetha
3 years ago
ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் – பிரசன்ன ரணதுங்க

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்ப, எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது 19ஆம் திகதி வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜூலை 20ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கான தெரிவு இடம்பெறும் என கூறினார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி பதவி விலகினால் இவை நடைபெறும் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதேவேளை போராட்டக்காரர்கள் சிலரையும் அழைத்து நாளைய தினமும் கட்சித்தலைவர்களின் மற்றுமொரு கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4