கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவளித்த காவல்துறை அதிகாரி கூரிய ஆயுதத்துடன் கைது!
Reha
3 years ago

கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக ஹைலெவல் வீதியால் வந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக மஹரகம நகருக்கு வந்த காவல்துறை உத்தியோகத்தர், இன்று அதிகாலை கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கூரிய ஆயுதத்துடன் நுழைய முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் காவல்துறைபோக்குவரத்து பிரிவிற்குட்பட்ட தொழில்நுட்ப காவல்துறை சார்ஜன்ட் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



