யூரியா உர மூட்டை 10,000 - மஹிந்த அமரவீர
Nila
3 years ago

இந்திய அரசின் உதவியுடன் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள யூரியா உரத்தை மூட்டை 10,000 ரூபா என்ற விலையில் வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் உரத்தை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்ற போதிலும், கூடிய விரைவில் உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய கடன் வசதியின் கீழ், ஓமானிலிருந்து யூரியா உரம் நேற்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த யூரியா உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.



