ஜனாதிபதி செயலகத்தை மீட்க விசேட இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா ?பொன்சேகா விசேட அறிவிப்பு!

Nila
3 years ago
ஜனாதிபதி செயலகத்தை மீட்க விசேட இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா ?பொன்சேகா விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக நேற்றுமுன்தினம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பில் இடம்பெற்றது.

பெரும் எண்ணிக்கையான மக்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகம் ஆர்ப்பாட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 13ம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கோட்டபாய ராஜபக்ச அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் ஆர்ப்பாட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தை ஆர்ப்பாட்டகாரர்களிடமிருந்து கைப்பற்ற பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவுள்ளதாக பல்வேறு செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளதாவது,

‘இந்த நேரத்தில் போராட்ட களத்தை ஆக்கிரமிக்கும் ராணுவ நடவடிக்கை இருக்காது.
பதற்றமடையாமல் அமைதியாகவும் வன்முறையற்ற முறையிலும் உங்கள் போராட்டத்தைத் தொடங்குங்கள்.’என பதிவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!