யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Kanimoli
3 years ago
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வீதி, சங்கானை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்த பெண் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும் “நான் உங்களுக்கு தொந்தரவாக இருப்பதற்கு விரும்பவில்லை” என்றும் உறவினர்களுக்கு கூறியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலமானது யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

சங்கானை பகுதியைச் சேர்ந்த 81 வயதான கந்தையா அன்னம்மா என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4