இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக மஹிந்த யாப்பா அபேவர்தன?
Nila
3 years ago

ஜனாதிபதி மற்றும் பிரதமரைப் பதவி விலகுமாறு கோருவதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூஃப் ஹக்கீம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அரசியலமைப்புக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இடைக்கால ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உடனடியாக அனைத்துக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்கவும் இணங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



