கொழும்பின் தற்போதைய நிலவரம்! மக்கள் சாரை சாரையாக காலி முகத்திடலை நோக்கி படையெடுப்பு

Mayoorikka
3 years ago
கொழும்பின் தற்போதைய நிலவரம்! மக்கள் சாரை சாரையாக காலி முகத்திடலை நோக்கி படையெடுப்பு

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான கோஷங்களை எழுப்பிக்கொண்டு மக்கள் சாரை சாரையாக காலி முகத்திடலை நோக்கி படையெடுக்கின்றனர்.
பெரும்பாலானவர்கள் தேசிய கொடியை ஏந்தியிருக்கின்றனர்.
நந்த​சேன என்று ஏழுதப்பட்டிருக்கும் பதாகைளையும் தாங்கி நின்றிகின்றனர்.
“கோட்டா வீட்டுக்குப் போ” எனும் கோஷங்கள் காதை கிழித்துச் செல்கின்றன.
கோட்டை, பொலிஸ் தலைமையகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பிரதேசங்களில் இரும்புக் கம்பிக்களைக் கொண்டு வேலிகள் பின்னப்பட்டுள்ளன.
நீர்​கொழும்பு- கொழும்பு வீதியில் ஓர் ஒழுங்கை மூடப்பட்டுள்ளது. பெரும் திரளான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பை நோக்கி படையெடுத்து வருன்றனர்.
மொரட்டுவை பகுதியிலிருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வருகைதருகின்றனர்.
கொழும்பில் பல பகுதிகளிலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பேரா​தனைப் பல்கலைகழகத்தில் இருந்தும் மாணவர்கள் பஸ்களில் வருகின்றனர்.
சைக்கிள்களின் ஓட்டம் அதிகரித்துள்ளது.
பொலிஸ் வானங்களின் ரோந்து அதிகரித்துள்ளது.
லொறிகளுக்குள் போராட்டக்காரர்கள் ஏற்றி வரப்படுகின்றனர்.
பொதுப் போக்குவரத்துச் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம். எனினும், தனியார் பஸ்கள் இரண்டொன்று சேவையில் ஈடுபட்டுள்ளன.
அதிர்ஷ்ட இலாபச் சீட்டு கூடாரங்கள் திறந்துள்ளன.
பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பெட்டிக்கடைகள் திறந்துள்ளன.
மருந்தகங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன
மதுபானசாலைகளும் திறந்துள்ளமையை அவதானிக்க முடிந்தது
நிர்மாணத்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய க​டமைகளைச் செய்கின்றனர்.
பட்டா ரக வாகனங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றிவரப்படுகின்றனர்.
போக்குவரத்துப் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய இடங்களில் ஆயுதம் தரித்த ​​​​இராணுவத்தினர் கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடற்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்களத்துக்கு பெருந்திரளானோர் நடந்தே வந்துகொண்டிருக்கின்றனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்  வரிசைகள் குறைந்துள்ளன. சில இடங்களில் எரிபொருள் வரிசைகளே இல்லை

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4