தனது மனைவி மற்றும் மகனின் வெளிநாட்டு பயணங்கள் அரசியல் தொடர்பானது - நாமல் ராஜபக்ச
Kanimoli
3 years ago

தனது மனைவி மற்றும் மகனின் வெளிநாட்டு பயணங்கள் அரசியல் தொடர்பானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தந்து டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு நாமல் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில்,
“மனைவியின் பயணங்கள் முற்றிலும் அவரது பணிகள் மற்றும் சுற்றுலாத்துறையை அடிப்படையாக கொண்டவை. அதற்கும் தனது அரசியல் வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அவர் தொடர்ந்தும் அதில் ஈடுபடுவார். அவரது பயணம் முற்றிலும் அவரது பணியுடன் தொடர்புடையது, அது Breaking செய்தி என்று நினைக்க வேண்டாம்” என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாளை அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச தனது குழந்தையுடன் சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



