இலங்கையில் வங்கிக் கடன் பெற்றவர்களுக்காக மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

Nila
3 years ago
இலங்கையில் வங்கிக் கடன் பெற்றவர்களுக்காக மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கிக் கடன்களை செலுத்த முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஆறு மாதத்திற்கு இரு தடவைகளாக அவற்றை செலுத்துவதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மத்திய வங்கியினால் வங்கிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கடனை மீளச் செலுத்துவதற்கு ஆறு மாத கால சலுகை வழங்குவது, முறைப்படியான செயற் திட்டத்தின் மூலம் வங்கிக் கடனை அறவிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலத்தை நீடிப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செயற்படாத கடனை செலுத்தவுள்ளோரின் பட்டியலில் உள்ளோர் புதிய கடன்களை பெற்றுக் கொள்ளும்போது கடன் தகவல் பிரிவில் சலுகையுடனான மதிப்பீடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள மத்திய வங்கி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4