இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட அறிவிப்பு!

Nila
3 years ago
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட அறிவிப்பு!

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பல விமான சேவைகள் இரத்து செய்யப்படலாம் என பரப்பப்படும் சில பொய்யான தகவல்களை திருத்த எதிர்பார்ப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளதால், ஒரு வாரத்திற்கும் மேலாக தங்களின் விமான கால அட்டவணையை தகுந்த மாற்றங்களுடன் நிர்வகிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலைமைகளை நிர்வகிக்க, விமான அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு விமான நிலையங்களில் தொழில்நுட்ப நிறுத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, சில விமானங்களின் நேரம் மற்றும் கால அளவுகளில் சில மாற்றங்கள் இருக்கலாம் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமான அட்டவணையை 100% வினைத்திறனுடன் கால அட்டவணை திருத்தங்களின் தாக்கத்திற்கு மத்தியிலும் இயக்குகிறது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில், திட்டமிடப்பட்ட விமானச் செயற்பாடுகளை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கிறது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு அருகில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது www.srilankan.com ஐப் பார்வையிடவும் என அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4