தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழப்பு மன அழுத்தத்தினால் பாதிப்பு

Kanimoli
3 years ago
தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழப்பு மன அழுத்தத்தினால் பாதிப்பு

அவுஸ்திரேலியா சென்ற இலங்கைத் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசித்து வந்த இரட்ணசிங்கம் பரமேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

48 வயதான அவர் இன்று காலை தூக்கத்திலேயே உயிரிழந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அவர், மேன்முறையீட்டு வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திய நிலையிலேயே அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தார். வேலை செய்வதற்கான உரிமையும் அவருக்கு அங்கு மறுக்கப்பட்டுள்ளது.

இரட்ணசிங்கம் பரமேஸ்வரனின் 25 வயதான மகனும் மனைவியும் இலங்கையில் வசிக்கின்றனர்.

நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தமை மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றின் கூட்டுவிளைவாக அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4