கொழும்பு கோட்டையில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Mayoorikka
3 years ago
கொழும்பு கோட்டையில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இன்று அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கொழும்பு கோட்டையில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகுமாறு பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) இன்று சைக்கிள் அணிவகுப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வகட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த சைக்கிள் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

FUTA ஆனது நுகேகொட மேம்பாலத்திற்கு அருகாமையில் இருந்து சைக்கிள் அணிவகுப்பை ஆரம்பித்து கொழும்பில் உள்ள பொது நூலகத்திற்கு அருகில் நிறைவடைந்தது, அதன் பின்னர் பொது ஒன்றுகூடல் நடைபெற்றது.

நாளை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4