பதவியில் இருந்து விலகும் போரிஸ் ஜோன்சன்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பழமைவாத கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளார்.
எனினும் பிரதமர் பதவியில் நீடிக்கவுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் அவர் விசேட உரை ஒன்றை நிகழ்த்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சி தலைமையில் இருந்து விலகும் அவர் இலையுதிர் காலம் வரை பிரதமராக நீடிப்பார் என்று பிபிசி தெரிவிக்கிறது.
இந்த கோடையில் கொன்சர்வேடிவ் தலைமைப் போட்டி நடைபெறும்.மேலும் அக்டோபரில் கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.
கட்சியின் துணை அமைப்பாளராக செயற்பட்டு வந்த கிறிஸ் பின்ஷர், கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரண்டு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார்
எனினும் கிறிஸ் மீது பிரதமர் போரிஸ் ஜோன்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நிதி அமைச்சர் ரிஷி சுனக் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித், சட்டத்துறை அமைச்சரான லாரா டிராட் குடும்ப நலத்துறை அமைச்சர் வில் குயின்ஸ் ஆகியோர் தங்களது பதவியை விட்டு விலகினர்.
இந்தநிலையிலேயே போரிஸ் ஜோன்சனும் கொன்சவேட்டிவ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார்.



